Sunday, November 21, 2010

ஹைக்கூ கவிதைகள்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
தமிழ்ச் சங்க ரோடு !!
                          -கவிஞர் இரா. ரவி      

16 comments:

  1. சுற்றுச் சுழல் விழிப்புணர்வு ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    முயன்றால் சாத்தியமே
    மரணமில்லாப் பெருவாழ்வு
    சுற்றுச் சுழல் பேணல்

    வீடு தெரு ஊர்
    சுத்தமானால்
    ஓடிவிடும் நோய்கள்

    தீமையின் உச்சம்
    மக்காத எச்சம்
    பாலித்தீன்

    உணர்ந்திடுக
    மரம் வெட்ட
    மழை பொய்க்கும்

    கரும் புகை
    பெரும் பகை
    உயிர்களுக்கு

    கண்ணுக்குப் புலப்படாது
    புலன்களை முடக்கும்
    கிருமிகள்

    தெரிந்திடுக
    காற்றின் மாசு
    மூச்சின் மாசு

    இயற்கை வரத்தை
    சாபமாக்கிச் சங்கடப்படும்
    மனிதன்

    அறிந்திடுக
    சுத்தம் சுகம் தரும்
    அசுத்தம் நோய் தரும்

    புரிந்திடுக
    செயற்கை உரம் தீங்கு
    இயற்கை உரம் நன்கு

    கட்சிக் கொடிகளை விட்டு
    பச்சைக் கொடிகளை வளருங்கள்
    பசுமையாகும்

    மதிக்கத் தக்கது
    ரசனை மிக்கது
    ரசாயணமில்லா விவசாயம்

    வேண்டாம் வேண்டாம்
    பூச்சிக் கொல்லி மருந்து
    மனிதனையும் கொல்கிறது

    தாய்ப்பால் இயற்கை உரம்
    புட்டிப்பால் செயற்கை உரம்
    வேண்டாம் உலகமயம்

    ReplyDelete
  2. ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி

    எலிக்கு எதிரி
    குட்டிக்கு நண்பன்
    பூனையின் பல்…

    எல்லோரும் மகிழ்வாய்
    திருமண வீட்டில்
    தந்தை கடன் கவலையில்…

    கையில் வாங்கினான்
    அருகில் ஈட்டிக்காரன்
    ஊதியம்?…

    முரண்பாடு
    யானைக் கறுப்பு
    பேயரோ வெள்ளைச்சாமி…

    வந்த வழி தெரியாது
    செல்ல வழி கிடையாது
    காதல்…

    முயன்றதால் முடிந்தது
    உழைப்பினால் உருவானது
    குருவிக்கூடு…

    பிறர் சேமிப்பை
    அபகரித்தான் மனிதன்
    தேன்கூடு

    கண்ணால் காண்பதும் பொய்
    தேயும் தேய்வதில்லை
    நிலவு…

    அன்று கண்ணியம்
    இன்று களங்கல்
    கூட்டுறவு வங்கி…

    கொத்தனார் பணி
    அரசியல் பணியானது
    இடிப்பது கட்டுவது…

    ReplyDelete
  3. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


    அமாவாசை நாளில்
    நிலவு
    எதிர் வீட்டுச் சன்னலில்

    கடல் கரைக்கு
    அனுப்பும் காதல் கடிதம்
    அலைகள்...

    மரபுக் கவிதை
    எதிர்வீட்டு சன்னலில்
    என்னவள்...

    உயிரற்ற பொருளையும்
    தாக்கியது வைரஸ்
    கணினி

    ஒலியைவிட ஒளிக்கு
    வேகம் அதிகம்
    பார்வை போதும்

    விதவை வானம்
    மறுநாளே மறுமணம்
    பிறை நிலவு

    முகம் பார்க்க வேண்டும்
    என்னவளே உன்
    முகத்தைக் காட்டு....

    மானம் காக்கும் மலர்
    வானம் பார்க்கும் பூமியில்
    பருத்திப்பூ

    வண்ணம் மாற வில்லை
    மழையில் நனைந்தும்
    வண்ணத்துப்பூச்சி

    வண்ணம் மாறியது
    கட்சி தாவியது
    அந்தி வானம்

    கோடை மழை
    குதூகலப் பயணம்
    திரும்புமா? குழந்தைப்பருவம்.

    சாலையில் கவனம்
    வழியில் மரணக்குழி
    செய்தியாகி விடுவாய்

    சந்திரன் அல்லி
    நான் அவள்
    காதல்

    புத்தாடை நெய்தும்
    நெசவாளி வாழ்க்கை
    கந்தல்

    தோற்றத்தை விட
    குரல் அழகு
    குயில்

    ஏக்கத்தில் குழந்தை
    உயரத்தில் பஞ்சுமிட்டாய்
    வான் மேகம்.

    ஆயத்தம்
    டயர் வண்டி ஓட்டி
    நாளைய விமானி

    பிறரின் உழைப்பில்
    பிரகாசிக்கும் சோம்பேறி
    முதலாளி

    பறிக்க மனமில்லை
    அழகாய் மலர்ந்தும்
    விதைத்தது அவள்

    பறக்காமல் நில்
    பிடிக்க ஆசை
    பட்டாம்பூச்சி

    ReplyDelete
  4. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கண்களுக்கு விருந்து
    காட்சிப் பெட்டகம்
    இயற்கை

    உழைக்காத மலருக்கு
    வியர்வையா ?
    பனித்துளி

    பூமியிலிருந்து வானம்
    வானத்திலிருந்து பூமி
    தண்ணீர் சுற்றுலா மழை

    உச்சரிப்பைவிட
    உயரந்தது
    மௌனம்

    ஒழியவேண்டும்
    வரங்களுக்கான
    தவம்

    விரல்களின்றித்
    தீண்டியது
    தென்றல்

    உற்றுக்கேளுங்கள்
    பேசும்
    மலர்

    மரமும் கெட்டது
    மனிதனைப் பார்த்து
    கல்லானது

    ஒரு வீட்டில் ஒரு நாளில்
    இத்தனை பாலித்தீன்
    நாட்டில் ?

    யாருக்கு வாக்களிக்க
    தேர்ந்து எடுக்க முடியவில்லை
    குழப்பத்தில் மக்கள்

    ருசிப்பதில் திகட்டலாம்
    ரசிப்பதில் திகட்டுவதில்லை
    அழகு

    கிடைக்காததற்காக ஏங்குவது
    கிடைத்ததை உணராதது
    பலரின் வாழ்க்கை

    கற்பனைதான்
    கல்வெட்டானது
    தேவதை

    ஏழு வண்ணங்களில்
    எண்ணம் கவரும் வில்
    வானவில்

    பிரிந்து
    பின் சந்தித்தால்
    சுவை அதிகம்

    நேற்றைய நவீனம்
    இன்றைய நவீனமன்று
    நாட்டு நடப்பு

    ReplyDelete
  5. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
    பெயர் பொறிப்பவர்கள்
    உணருவதில்லை
    மரத்தின் வலி

    அடிபடும்போது வலிக்கவில்லை
    கொலை நடந்த போது வலித்தது
    கத்திக்கு

    ReplyDelete
  6. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி - ஹைக்கூ கவிதை


    கடை மூடியதால்
    குடி மகன்கள் வருத்தம்
    காந்தி ஜெயந்தி

    அசைவப் பிரியர்களுக்கு வருத்தம்
    ஞாயிறன்று வந்ததால்
    காந்தி ஜெயந்தி

    தேர்வு எழுதியதில்
    ஆள் மாறாட்டம்
    கல்வி அமைச்சர் ?

    காயம் இல்லை
    மரத்தில் இருந்து விழுந்தும்
    இலை

    அரசியல்வாதிகளின்
    கேலிக் கூத்தானது
    உண்ணாவிரதம்

    மரமானதற்கு
    வருந்தியது
    சிலுவை மரம்

    தந்திடுவீர்
    தானத்தில் சிறந்தது
    உடல் தானம்

    அசலை வென்றது
    நகல்
    செயற்கைச் செடி

    உடை வெள்ளை
    உள்ளம் கொள்ளை
    அரசியல்வாதிகள்

    கண்டுபிடியுங்கள்
    வேண்டுகோள்
    விழிகளில் மின்சாரம்

    ReplyDelete
  7. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உச்சரித்தாலே
    உதடுகள் முத்தமிடும்
    முத்தம்

    ReplyDelete
  8. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உயிர்களை ஊசலாடவிட்டவருக்கு
    பதவி ஊசலாடுகிறது
    சிதம்பர ரகசியம்

    பொதுஉடைமை
    உணர்த்தியது
    செம்பருதி பூ

    தங்கக்கூண்டு வேண்டாம்
    தங்க கூண்டு போதும்
    காதலர்களுக்கு

    இயற்கையின்
    இனிய கொடைகள்
    வண்ணங்கள்

    மூளையின்
    முடங்காத முயற்சி
    எண்ணங்கள்

    இதயத்தை இதமாக்கும்
    கோபத்தைக் குறைக்கும்
    இனிய இசை

    ஈடு இணை இல்லை
    இன்பத்தின் எல்லை
    காதல் உணர்வு

    அளவிற்கு அதிகமானால்
    ஆபத்து
    பணமும் காற்றும்

    யோசிப்பதில்லை பிறரைப்பற்றி
    சந்திக்கும்போது
    பிரிந்த காதலர்கள்

    அன்று பாசத்தால்
    இன்று பணத்தால்
    உறவுகள்

    புலியைக்கண்ட மானாக
    வேட்பாளரைக் கண்ட
    வாக்காளர்

    ReplyDelete
  9. அணு உலை உயிர்களுக்கு உலை கவிஞர் இரா .இரவி

    நமக்கு நாமே
    வைக்கும் அணுகுண்டு
    அணு உலை

    வராது பூகம்பம் சரி
    வந்தால்
    அணு உலை

    கணிக்க முடியாதது
    இயற்கையின் சீற்றம்
    அணு உலை

    கொலைக்களம் ஆக வேண்டாம்
    கூடங்குளம்
    அணு உலை

    மின்சாரம் காற்றிலும் கிடைக்கும்
    உயிர்கள் போனால் கிடைக்குமா ?
    அணு உலை

    பண நட்டம் பெற்றிடலாம்
    உயிர்கள் நட்டம் ?
    அணு உலை



    மின்சாரம் பெறப் பல வழி
    உயிர்கள் போக வழி
    அணு உலை

    உயிர்கள் அவசியம்
    மின்சாரம் அனாவசியம்
    அணு உலை

    வாழலாம் மின்சாரமின்றி
    வாழமுடியுமா?உயிரின்றி
    அணு உலை

    உயிரா ? மின்சாரமா?
    உயிரே முதன்மை
    அணு உலை

    வராது சுனாமி என்றவர்களே
    வராமலா இருந்தது சுனாமி
    அணு உலை

    உத்திரவாதம் உண்டா ?
    பூகம்பம் வரதா ?
    அணு உலை

    விரும்பவில்லை வெறுக்கின்றனர்
    மனிதாபிமானிகள்
    அணு உலை

    வேண்டும் என்போர்
    வசித்திட வாருங்கள்
    அணு உலை அருகில்

    ReplyDelete
  10. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    எங்கு ஒலித்தாலும்
    உடனே கவனிக்கிறேன்
    உன் பெயர்

    கொள்ளை அழகு
    நீரிலும்
    அவள் முகம்

    ReplyDelete
  11. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கேலிக்கூத்தானது
    அகிம்சையின் ஆயுதம்
    உண்ணாவிரதம்

    எடுபடவில்லை
    மோடியின்
    மோடிமஸ்தான் வேலை

    காந்தியடிகளை
    அவமானப்படுத்தும்
    மத வெறியர்

    பிறக்கும் போது இல்லை
    இறக்கும் போது உண்டு
    ஆடை

    யானையின் வாய்
    அரசியல்வாதியின் கை
    சென்றால் திரும்பாது

    இதயம் அல்ல
    மூளைதான்
    காதலியின் இருப்பிடம்

    ReplyDelete
  12. எய்ட்ஸ் ஹைக்கூ

    கவிஞர் இரா .இரவி

    பண்பாடுப் பயிற்றுவிக்கும்
    பயமுறுத்தல் நோய்
    எய்ட்ஸ்

    ஒழுக்கத்தைப் பொதுவாக்குவோம்
    இருபாலருக்கும்
    வராது எய்ட்ஸ்

    மருந்து இல்லை
    மரணம் உறுதி
    எய்ட்ஸ்

    உயிரை உருக்கும்
    உடலைக் கெடுக்கும்
    எய்ட்ஸ்

    கவனம் தேவை
    குருதி பெறுகையில்
    எய்ட்ஸ்

    எச்சரிக்கை
    ஊசி போடுகையில்
    எய்ட்ஸ்

    வரும் முன் காப்போம்
    உயிர்க் கொல்லிநோய்
    உணர்ந்திடுவோம்

    சபலத்தின் சம்பளம்
    சலனத்தின் தண்டனை
    எய்ட்ஸ்

    சில நிமிட மகிழ்வால்
    பல வருடங்கள் இழப்பு
    எய்ட்ஸ்

    வெறுக்க வேண்டாம்
    நேசிப்போம் நண்பராக
    எய்ட்ஸ் நோயாளிகளை

    ReplyDelete
  13. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    பொன்னகை விட
    பெண்களுக்கு அழகு
    புன்னகை

    வானில் மேகங்கள் எனும்
    சிக்கிமுக்கி கற்களின் உரசல்
    மின்னல்

    மனிதனின்
    முதல் நவீனம்
    மொழி

    வடிவானவள்
    அழகானவள்
    வடிவம்

    காது இல்லாத பாம்பிடம்
    முட்டாள் ஊதுகிறான்
    மகுடி

    அழிவிற்கு
    வழி வகுக்கும்
    ஆயுதம்

    பணக்கரார்களின்
    பாசக்கார நண்பன்
    வைரம்

    இன்றைய மனிதர்கள்
    மறந்துவிட்ட ஒன்று
    தர்மம்

    மனிதனின் பயனுள்ள
    கண்டுபிடிப்பு
    கருவி

    உணர்ச்சி வயப்படாமல்
    அறிவு வயப்பட்டு எடுப்பது
    யுத்தி

    ஏழைகளின் வீட்டிற்கு
    தேவையில்லை பூட்டு
    கதவு

    ReplyDelete
  14. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மனமெனும் நீதிமன்றத்தில்
    மன சாட்சியே
    நீதிபதி

    ஆசைகளைக் குறைத்தால்
    காணமல் போகும்
    கவலை

    கதை அளப்பவர்களின்
    கட்டுக் கதை
    வாஸ்து

    ஒன்றில் எழுதியது மூன்றில்
    நான்கில் எழுதியது எட்டில்
    ராசிபலன்கள்

    குறை உடலில்
    நிறை மனதில்
    மாற்றுத்திறனாளிகள்

    உயிர்காப்பான்
    தோழன்
    தலைக்கவசம்

    இன்றைய அமைச்சர்
    நாளைய சிறைவாசி
    அரசியல்

    மேல் பார்த்தால் பொறாமை
    கீழ் பார்த்தால் ஆறுதல்
    வாழ்வியல்

    கொலைகாரனையும்
    கொடூரமானவனையும்
    நேசிப்பவள் தாய்

    ஆபாசம் ஊறுகாய் அன்று
    ஆபாசம் சாப்பாடு இன்று
    திரைப்படங்கள்

    கூடியது அன்று
    கூட்டுகின்றனர் இன்று
    கூட்டம்

    வன்முறை போதிக்கும்
    போதி மரங்கள்
    திரைப்படங்கள்

    ஒரே குட்டையில்
    ஊறிய மட்டையில்
    சின்னத்திரை பெரியத்திரை

    பார்த்தீனியமாகத் திரைப்படங்கள்
    குறிஞ்சிமலராக எப்போதாவது
    நல்ல படங்கள்

    உயிருள்ளவரை
    ஒட்டியே இருக்கும்
    பிறந்தமண் நேசம்

    தொடக்கம் பீர்
    முடிவு பிராந்தி வாந்தி
    இளைஞர்கள்

    உளவியல்
    மனம் செம்மையானால்
    வாழ்க்கை செம்மையாகும்

    நினைத்தது நடக்கும்
    நல்லது நினைத்தால்
    நல்லது நடக்கும்

    ReplyDelete
  15. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    வேண்டாம் தீபாவளி
    சாகவில்லை நரகாசூரன்
    வாழ்கிறான் இலங்கையில்

    காக்கவில்லை கடவுள்
    சாலை ஓவியரை
    மழை

    விலைவாசி ஏற்றம்
    ஏழைகள் திண்டாட்டம்
    தீபாவளி

    மாளிகைக் குழந்தையை
    ஏக்கத்துடன் பார்த்தது
    குடிசைக் குழந்தை

    சின்னமீன் செலவு
    சுறாமீன் வரவு
    அரசியல்

    ஆசையால் அழிவு
    தூண்டில் புழுவால்
    உயிரிழந்த மீன்

    தோன்றின் புகழோடு
    தோன்றுக
    வானவில்

    ReplyDelete
  16. இன்றைய அரசியல் கவிஞர் இரா .இரவி

    வீட்டின் கூரையில் ஏறி தீ வைப்பவன்தான்
    வாய்த்த பிள்ளைகளில் மிக நல்லவன் .

    இன்றைய அரசியல் நிலைமையும்
    இப்படித்தான்.

    யாருமே சுத்தமில்லை அரசியலில்
    இருக்கும் அசுத்தத்தில்
    குறைந்தப்பட்ச அசுத்தம்
    தேர்வாகின்றது .

    தந்தை பெரியார் சொன்னது
    முற்றிலும் உண்மையானது .
    அரசியல் இன்று
    அயோக்கியர்களின் புகலிடமானது .

    ReplyDelete