Thursday, October 27, 2011

மனிதன் தனக்கு என்று பெரும்பொருளைச் சேர்த்து வைத்தால் தன் பெயர் நிலைத்து நிற்காமல் மறைந்து போய் விடுகிறது. ஆனால் மற்றவர்களின் நலனுக்கு என்று சிறிதளவு மதிப்புள்ள பொருளைவிட்டுச் சென்றாலும், அது அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும் ...
எனவே மனிதன் தன்னலத்திற்க்கென்று புகழைத் தேடுவதற்குச் செய்யும் முயற்சி அத்தனையும் உண்மையில் புகழைக் கொடுப்பது இல்லை.பிறர் நலத்திற்கு என்று வைத்து செல்லும் பொருளே அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும். ----தந்தை பெரியார் 

Monday, November 29, 2010

தந்தை பெரியாரைப் பற்றி என் தந்தை.....

அறிவு எங்களுக்கு
அதிசயமாக போன பிறகு....
மானம் எங்களுக்கு
மறதியாக போனபிறகு....
வீரம் எங்களுக்கு
வெறுங்கதையான பிறகு...
அடிமைத்தனமே எங்களது
அன்றாட வாழ்வான பிறகு...
சுயநலம் எங்களுக்கு
சோறாக ஆனபிறகு....
"கடவுள்" எங்களின்
கருத்தையும் கையையும் கட்டிப்போட்ட பிறகு....
"விதி" எங்கள் முயர்ச்சிகளை
விலைக்கு வாங்கிவிட்ட பிறகு...
"சாத்திரங்கள்"-எங்கள்
சாகசங்களை அடக்கிவிட்ட பிறகு...
பார்பனனும் பண்டிகைகளும் எங்கள்
பணங்களை பறித்துவிட்ட பிறகு...
சொரணை எங்களுக்கு
சொந்தமில்லாது போய்விட்ட பிறகு...
உணர்வு எங்களைவிட்டு
ஊர்தேசம் போய்விட்ட பிறகு...
"மனிதன்" என்ற நிலைமாறி - நாங்கள்
மரக்கட்டைகளாக ஆன பிறகு...
புனிதனே !! நீ வந்தாய்...
புயலாகி பொய்மைகளைச் சாடினாய்...
ஓய்வே கொள்ளாமல்
ஊர்நகரம் சுற்றிவந்தாய்...
ஒலிச்சங்காய் ஓங்கிக்குரல் கொடுத்து
எம் தூக்கம் அகற்றிவிட்டாய்..!!
கருப்புச் சட்டையுடன் வந்தாலும்
எங்களை
வெளிச்சத்திரற்கு கொண்டு வந்துவிட்ட
பொறுப்புள்ள தந்தை நீதான்!
உன்
பூப்பாதம் நடந்த வழியினில்
புது உலகம் படைக்க நாங்களும்
"எங்களையே அழித்து -ஒளிரும்
கருப்பு மெழுகுவர்த்திகளாய்"
 நேற்றும் இன்றும் என்றும்
வாழ்வோமய்யா..!!!

Monday, November 22, 2010

வெடிக்கும் சத்தத்தில் கேட்கவில்லை    
அவர்களின் அழுகுரல்.
                                        -குழந்தை தொழிளாலர்
 . சரஸ்வதி 
               படிப்பில் அல்ல , 
               வெடியில் மட்டும் ,
                                          -குழந்தை தொழிலளர்களுக்கு
     

Sunday, November 21, 2010

ஹைக்கூ கவிதைகள்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
தமிழ்ச் சங்க ரோடு !!
                          -கவிஞர் இரா. ரவி